உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

மதுரை தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்பத்திருவிழா 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்தில் சுவாமி எழுந்தருளும் வைபவம் நேற்று நடைபெற்றது. அம்மன் வெள்ளி அவுராத் தொட்டிலிலும், சுவாமி, பிரியாவிடையுடன் வெள்ளிச் சிம்மாசனத்திலும் எழுந்தருளினர்.  தெப்பத்திருவிழாவை முன்னிட்டு நிலைத்தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத் தெப்பம் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !