உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலாங்குளத்தில் வாழைப்பழத் திருவிழா!

கோயிலாங்குளத்தில் வாழைப்பழத் திருவிழா!

சோழவந்தான்: கோயிலாங்குளம் ராக்காயிஅம்மன், சின்னச்சாமி சுவாமி கோயில்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய வாழைப்பழத் திருவிழா நடந்தது. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கோயிலாங்குளத்தில் ராக்காயி அம்மன், சின்னச்சுவாமி கோயில்கள் உள்ளன. ஆறு வகை பங்காளிகள் ஒன்றுகூடி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாழைப்பழத் திருவிழாவை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் கிராம இளைஞர்கள் வாழைப்பழங்களை வைத்து அம்மனை வழிபட்டனர். பின் வரிசையாக பழங்களை சுமந்து, 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கோயிலாங்குளத்திற்கு சென்றனர். பக்தர் பொன்னாங்கன் கூறியதாவது: குலதெய்வங்களுக்கு காணிக்கையாக வாழைப்பழங்களை வைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே கிராமத்தில் நோய் பரவியது. விவசாயம், பிற தொழில்கள் பாதிக்கப்பட்டன. பின் வாழை பழங்களை காணிக்கையாக இந்த கோயில்களில் செலுத்த அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தன. அன்று முதல் கிராமத்தினர் ஒன்றுகூடி 10 தலைமுறைகளாக விழாவை நடத்துகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !