ஏழுமலையானை தரிசிக்க 25 மணி நேரம் காத்திருப்பு!
ADDED :4322 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், வியாழக்கிழமை, 25 மணி நேரம் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், பக்தர்கள் வியாழக்கிழமை, 25 மணி நேரமும், பாத யாத்திரை பக்தர்கள், 10 மணி நேரமும் காத்திருந்தனர். பக்தர்களின் அதிக கூட்டம் காரணமாக, 300 ரூபாய் விரைவு தரிசனம், மதியம் ரத்து செய்யப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 35 ஆயிரம் பக்தர்களும், புதன்கிழமை முழுவதும், 61 ஆயிரம் பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்தனர். வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளை கடந்து, 1 கி.மீ., தொலைவிலும், பாத யாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளை கடந்து, அரை கி.மீ., தொலைவிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.