உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய கல்யாண பெருமாளுக்கு விடையாற்றி உற்சவம்

நித்ய கல்யாண பெருமாளுக்கு விடையாற்றி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை தினந்தோறும் வாசிக்கப்பட்டு சொற்பொழிவும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு, ஆண்டாளுடன் ஏகாசனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் சாற்றுமுறை, சமபந்தி விருந்து நடந்தது. நேற்று காணும் பொங்கல் தினத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !