குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்
ADDED :4320 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச விழா கொடியேற்றம்,கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில், சுவாமி திருவீதி உலா, சிறப்பு தீபாராதனை, அபிஷேகங்கள் நடந்தது. ஆறாம் திருவிழாவன்று, தங்கரதத்தில் வீதி உலாவும், 8ம் திருவிழாவன்று வெள்ளி ரதத்தில் ஊர்வலமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 5.45 மணிக்கு, சுவாமி தேருக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3.30 மணிக்கு, தேரோட்டம் தொடங்கியது.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் துவக்கி வைத்தார். நான்கு ரதவீதி வழியாக, மாலை 6 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.