காஞ்சி வரதராஜப்பெருமாள் தெப்ப உற்சவம்!
ADDED :4318 days ago
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சம் நேற்று சிறப்பாக தொடங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ கோயிலில் பெருமாள் பார்வேட்டை உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக காஞ்சி வரதராஜப் பெருமாள் உற்சவர், பொங்கல் அன்று இரவு மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் புடைசூழ பழைய சீவரம் புறப்பட்டு சென்றார். பார்வேட்டை சென்று வந்த வரதராஜப் பெருமாளுக்கு கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் தெப்பக்குளத்தில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.