சிவன்மலையில் தைப்பூசத் தேர் திருவிழா!
ADDED :4317 days ago
காங்கயம்: சிவன்மலை முருகன் கோவில் தைப்பூச விழாவில், தேர் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூசத் தேர் திருவிழா கடந்த 8-ஆம் தேதி அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது. 18-ஆம் தேதி திருத்தேர் மலையை வலம் வந்து, 19-ஆம் தேதி தேர் நிலை அடைகிறது.