உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகளின் 92வது குருபூஜை விழா!

சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகளின் 92வது குருபூஜை விழா!

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகளின் இந்த வருடத்திய 92வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது. தைத்திங்கள் 26ம் நாள் (19-01-2014)  மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை  தலைவர் சுவாமி சின்மையானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு: சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது. சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார். சுவாமி சதானந்தா தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் முலமாக கற்றுக்கொண்டார்.

தகவல்: தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
சதானந்தபுரம் , சென்னை -600063


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !