உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசம் முடிந்தும் பக்தர்கள் பாதயாத்திரை!

தைப்பூசம் முடிந்தும் பக்தர்கள் பாதயாத்திரை!

பொள்ளாச்சி: தைப்பூசம் முடிந்த பின்பும், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் மட்டும் இன்னும் குறையவில்லை.தை மாதம் வரும், பூச நட்சத்திர தினத்தை தைப்பூசம் என்று கொண்டாடுவது தமிழக மக்களின் வழக்கம். முருகனுக்கு உகந்ததாக கருதப்படும் இந்நாளில், பழநி மலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதற்காக, பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து நடந்தே அங்கு வருவர். இந்த ஆண்டின் தைப்பூச விழா, கடந்த 17ம் தேதி நடந்தது. தைப்பூசம் கடந்து இரு தினங்கள் ஆன பிறகும், பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக செல்வது இன்னும் தொடர்கிறது. பொள்ளாச்சி பகுதியில் கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு ஆகிய பகுதிகளில் சாரி சாரியாக பக்தர்கள் செல்கின்றனர்.பக்தர் ஒருவர் கூறுகையில்,""தைப்பூசத்தினத்தில், பழநியில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். ”வாமி தரிசனம் செய்வதற்குள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். இதைத்தவிர்க்க, பூசம் முடிந்த பிறகு பாத யாத்திரை கிளம்பியுள்ளோம். தை மாதம் முழுவதும் முருகனுக்கு உகந்த மாதம்தான் என்றார். பொள்ளாச்சி வழியாக பழநிக்கு நடந்து செல்லும் பக்தர் கூட்டம், பல்வேறு ஊர்களிலிருந்தும் வருகிறது. இவர்கள், வெயில் நேரத்தில் ஓய்வெடுத்துவிட்டு இரவு வேளைகளில் நடக்கின்றனர். இதனால், பொள்ளாச்சி பகுதி கடைகளில், தை மாதம் முழுதும் இரவு வியாபாரம் சூடு பிடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !