சித்தலூர் கோவிலில்ஸ்தாபன கலச பூஜை
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட முன்மண்டபத்தில் ஸ்தாபன கலசபூஜை நடந்தது.தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடி மரம் அமைந்துள்ள முன்மண்டபம் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் காந்தி என்பவர் தனது சொந்த செலவில் இம்மண்டபத்தை கட்டி கொடுத்துள்ளார்.இம்மண்டபத்தில் நேற்று ஸ்தாபன கலசபூஜை நடந்தது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.புதிதாக கட்டப்பட்டுள்ள முன்மண்டபத்தில் கணபதி ஹோமம் செய்து யாக பூஜைகள் நடத்தி புனித நீர் தெளிக்கப்பட்டது. மாதேஸ்வரன் குருக்கள், பூசாரிகள் ஏழுமலை, கோவிந்தன், சுரேஷ், ராமச்சந்திரன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.ராஜசேகர், தர்மகர்த்தா பாஞ்சாலை, கோவிந்தசாமி உள்பட பக்தர்கள் திரளாக பூஜையில் கலந்து கொண்டனர்.