உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சரித்திர சொற்பொழிவு

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சரித்திர சொற்பொழிவு

சின்னசேலம்: சின்னசேலம் வாசவி, வனிதா கிளப் சார்பில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சரித்திர சொற்பொழிவு நடந்தது.சின்னசேலம் வாசவி மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். வனிதா கிளப் தலைவர் கிரிஜா பன்னீர்செல்வம் வரவேற்றார்.நிகழ்ச்சியில் குன்னம் வேப்பூர் ராதாகிருஷ்ணன் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் குறித்து சொற்பொழிவாற்றினார். ஆர்ய வைசிய நிர்வாக பொருளாளர் ராமதாஸ், துணை தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை விஜயலட்சுமி ஜெயக்குமார் செய்திருந்தார். சுபஸ்ரீ வேலுமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !