உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச தேர்த்திருவிழா!

தைப்பூச தேர்த்திருவிழா!

கோத்தகிரி: கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா நடந்தது.முக்கிய திருவிழா நாளான 17ம் தேதி காலை 6:00 மணிக்கு, அபிஷேக அலங்கார மலர் வழிபாடு, 12:00 மணிக்கு, காவடி ஆட்டம், பகல் 2:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு, "அரோகரா கோஷத்துடன், திருத்தேரோட்டம் சிறப்பாக நடந்தது. விழா நிறைவு நாளான 18ம் தேதி, பகல் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதே போல், தேன்மலை, நட்டக்கல் கோவில்களில் தைப்பூச தேர் திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !