உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாத்துக்குடி சிவன் கோயில் தெப்பத்திருவிழா

துாத்துக்குடி சிவன் கோயில் தெப்பத்திருவிழா

துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். துாத்துக்குடி சிவன் கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது. நேற்று முன் தினம் சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. பின் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின் தெப்பத்தில் தேர் 11 முறை சுற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !