தியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் கோலாகலம்!
ADDED :4308 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவையாறில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜர் சுவாமியின் 167வது ஆராதனை விழா, ஜன., 17ல் துவங்கு நடைபெற்று வருகிறது. இன்று ஜன.,21ல் தியாகராஜர் சுவாமிக்கு, ஆராதனை நடக்கிறது. இதில், நாடு முழுவதும் இருந்து, நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று, கீர்த்தனைகளை இசைக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூரில் 167வது தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.