6,000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் கண்டுபிடிப்பு!
பாட்னா: பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள, பாண்டு பகுதியின் நாகரிகம், 6,000 ஆண்டுகள் பழமையானது என்பதை, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.மு., 4200 1500 முதல், மவுரிய காலம் வரையிலான காலத்தில், பாண்டு நாகரிகம், இப்பகுதியில் இருந்துள்ளது. இப்பகுதியில் கிடைத்த தாவரங்கள் மற்றும் எலும்புக்கூடுகளை, "கார்பன் டேட்டிங் முறைப்படி, ஆய்வு செய்ததில், இவற்றின் காலம் தெரிய வந்துள்ளது. இப்பகுதியில், தானியங்கள், கோதுமை மற்றும் எண்ணெய் வித்துகள் பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பில், மக்கள் ஈடுபட்டிருந்தது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், எலும்பினால் செய்யப்பட்ட, அம்பு, கூர்மையான ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களும், இங்கு கிடைத்துள்ளன. பேனா முனை போன்று, கூர்மையாக செதுக்கப்பட்ட, இரண்டரை அங்குல நீளமுள்ள, மான் கொம்பு கிடைத்துள்ளது. நுட்பமாக செதுக்குவதில், இப்பகுதி மக்கள், சிறந்து விளங்கியுள்ளனர்.