வால்பாறை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4308 days ago
வால்பாறை :வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் 30ம் ஆண்டு திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று (22ம் தேதி) காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.பின்னர் காலை 11.55 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து அன்னதான விழாவை வால்பாறை தாசில்தார் பாலகிருஷ்ணன், நகராட்சிக்கமிஷனர் வெங்கடாசலம், தலைவர் சத்தியவாணிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.