உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா!

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா!

திருவேற்காடு: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், கடந்த, 7ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடக்கும் அந்த விழாவின் ஒரு பகுதியாக, கடந்த, 21, 22 மற்றும் 23ம் தேதிகளில், தெப்பத் திருவிழா நடந்தது. இரவு, 7:00 முதல், 9:30 மணிவரை, நடந்த இந்த விழாவில், அம்மன் முதல் நாளன்று, கருமாரியம்மன் கோலத்திலும், இரண்டாவது நாளில், லட்சுமி கோலத்திலும், மூன்றாவது நாளில், சரஸ்வதி கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டார். குளத்தில், தெப்பம், ஒன்பது முறை வலம் வந்தது. இந்த விழாவில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் குளத்தை சுற்றி நின்று, அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி, கோவில், குளம், குளத்தில் உள்ள நீராழி மண்டபம், தெப்பம் என, அனைத்தும், மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !