உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூர்வ ஜென்ம பாவ பரிகார ஸ்தலமான ஸ்ரீ நித்திய கல்யா ணி உடனாகிய சோழீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. சிதிலமடைந்திருந்த இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை, சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், கிராம மக்கள் சேர்ந்து திருப்பணி செய்தனர். பணிகள் முடிவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்குகால பூஜை முடிந்து காலை பூர்ணாகுதி, தீபாராதனை நட த்தப்பட்டன. காலை 08:30 மணிக்கு கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து சுவாமி, அம்பாள், பரிவாரமூர்த்திகள் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை திருவெள்ளியங்குடி ராமகிருஷ்ண குருக்கள், கோயில் அர்ச்சகர் சரவணபவன் குருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தில் வேலாக்குறிச்சிஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மாகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மகாலட்சுமி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பக்கிரிசாமி, கன்னன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார், ஆய்வர் சுதா,செயல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் ஸ்ரீ நித்திய கல்யாணி அம்மன் கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்திருந்தனர். பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !