கரியகாளியம்மன் கோவில் குண்டம் விழா துவக்கம்
ADDED :4386 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே கோரக்காட்டூரில், கரியகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஜன., 15ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை காலை தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாகபூஜை, 26 தேதி அதிகாலை, 4 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, காலை, 5.30 முதல், 6.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும், 27ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், கிராமசாந்தி, 28ம் தேதி கொடியேற்றம், சுமங்கலி யாகபூஜை, 29ம் தேதி பொங்கல், மாவிளக்கு, குண்டம் திறப்பு, 30ம் தேதி அதிகாலை குண்டம், பூ மிதித்தல், பகல் ஒரு மணிக்கு அக்னி அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி அம்மன் ரதம் ஏறுதல், ரத உற்சவம், நடன நிகழ்ச்சி, ஒன்றாம் தேதி வான வேடிக்கை, புஷ்ப பல்லக்கு, 2ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், மறு பூஜை நடக்கிறது.