பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கட்டுமான பணி!
ADDED :4387 days ago
மயிலம்: கூட்டேரிப்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி திருப்பணிக்கு நன்கொடை வசூலித்தனர். கூட்டேரிப்பட்டு பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் பள்ளி கொண்ட பெருமாள், ரங்கநாயகி தாயார், ஆண்டாள், கருடன் சன்னதி கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளது. இந்த கோவில் கட்டடம் கட்ட கூட்டேரிப்பட்டு, கொல்லியங்குணம், மயிலம் ஆகிய கிராமங்களில் பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தனர். இந்த கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை அளிப்பவர்கள் பொருட்களாகவும், பணமாகவும் வழங்கலாம். மயிலம் ஸ்டேட் பேங்க் கணக்கு எண் 32818882226ல் பணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 93450 39810 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.