ஸ்ரீபெரும்புதுாரில் கூரத்தாழ்வான் சாற்றுமுறை!
ADDED :4387 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், கூரத்தாழ்வான் சாற்றுமுறை உற்சவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகம் எதிரே, கூரத்தாழ்வான், மணவாளமாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்நிலையில், ஆண்டுதோறும் தை மாதம், கூரத்தாழ்வான் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 20ம் தேதி, உற்சவம் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவமான சாற்றுமுறை, நேற்று நடைப்பெற்றது. சாற்றுமுறையை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, கூரத்தாழ்வான் அலங்கரிக்கப்பட்ட கேடய வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.