கடலூர் ராஜ கோபாலசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4299 days ago
கடலூர்: தை வெள்ளியை முன்னிட்டு கடலூர் புதுப்பாளையம் ராஜ கோபாலசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் செங்கமலத் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.