உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதானூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

வாதானூர் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருக்கனூர்: வாதானூர் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனூர் அடுத்த வாதானூர் கிராமத்தில், பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடந்த 21ம் தேதி வாஸ்து சாந்தி, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை வாதானூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !