உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவில் உண்டியல்: வசூல் ரூ.1.30 கோடி!

அண்ணாமலையார் கோவில் உண்டியல்: வசூல் ரூ.1.30 கோடி!

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக, ஒரு கோடியே, 30 லட்சம் ரூபாய் வசூலானது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்து, உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், இரண்டு நாட்களாக, உண்டியல் திறந்து, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் (பொ) திருமகள், உதவி ஆணையர் வேதா, பிரகாஷ், கண்காணிப்பாளர் விவேகானந்தன், ராஜலட்சுமி, மேற்பார்வையாளர் துவாரநாத், ஆகியோர் முன்னிலையில், 200 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.உண்டியல் எண்ணப்பட்டதில், காணிக்கையாக, ஒரு கோடியே, 30 லட்சத்து, 37ஆயிரத்து, 503 ரூபாய் மற்றும், 105 கிராம் தங்கமும், 1,752 கிராம் வெள்ளியும் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !