உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லீஸ்வரர் கோவில் குளத்தில் உழவார பணி!

திருவல்லீஸ்வரர் கோவில் குளத்தில் உழவார பணி!

கொரட்டூர்: பாடி திருவல்லீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியில், ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர். கொரட்டூர் அடுத்த பாடியில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற, ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் குளம், பராமரிப்பின்றி கிடந்தது.அதையடுத்து, சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், நேற்று குளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. மன்ற உறுப்பினர்கள் குளத்தில் இறங்கி, செடி, கொடி மற்றும் குப்பை கழிவுகளை அகற்றினர். கோவிலின், சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளை, தூய்மைப்படுத்தினர்.  உழவார பணியில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் உட்பட, 200 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக, குளத்தில் அடர்ந்து கிடந்த புதரில், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உள்ளதா என்று, கால்நடை துயர் தடுப்பு கழகத்தினர் சோதனையிட்டனர். இதுகுறித்து, இறை மன்ற நிர்வாகிகள் கூறுகையில் எங்களுக்கு, இங்கு, 144வது மாத பணி. ஒவ்வொரு மாதமும், 4வது ஞாயிறன்று, இதுபோன்ற உழவார பணியில் ஈடுபடுகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !