மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம் : 600 சிறப்பு பஸ்கள்!
முன்னிட்டு, மேல்மலையனூருக்கு, 600 சிறப்பு பஸ்களை இயக்க, விழுப்புரம் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில், அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசையன்று, ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடக்கும். வரும், 30ம் தேதி, தை அமாவாசை என்பதால், ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் பங்கேற்க, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, பல லட்சம் பக்தர்கள் வருவர். இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, அதிகளவிலான சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் இருந்து மட்டும், 250 பஸ்கள் இயக்கப்படும். வரும், 31ம் தேதி, பக்தர்கள் திரும்பிச் செல்லவும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.