உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி படிக்கட்டில் படியும் கற்பூரங்களால் பக்தர்கள் பாதிப்பு!

பழநி படிக்கட்டில் படியும் கற்பூரங்களால் பக்தர்கள் பாதிப்பு!

பழநி: பழநி மலைக்கோயில் யானைப்பாதை, படிக்கட்டுபாதைகளில் சூடம் ஏற்றுவதால், ஏராளமான மெழுகு படிந்துள்ளது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள், தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பழநிமலைக்கோயிலுக்கு யானைப்பாதை, படிப்பாதை என, பக்தர்கள் மலையேறிச்செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இவ்வழிகளில், ஏராளமான உபயதாரர் மண்டபகங்கள், படிகட்டுகள் உள்ளன. யானைப்பாதை, படிப்பாதை வழியிலுள்ள மண்டபங்கள், படிக்கட்டுகளிலும், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் துவங்கும் இந்த வழிபாடு, தொடர்ந்து மலைக்கோயில் கடைசி படிக்கட்டு, இரட்டை விநாயகர் கோயில், வெளிப்பிரகாரம் வரை தொடர்கிறது. சரியாக எரியாத கற்பூரங்கள் மெழுகுபோல் அதிகளவில் படிக்கட்டுகளில் படிந்துள்ளது. மலையேறும், சிறியவர்கள், பெண்கள், வயதான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் படியேறும்போதும், இறங்கும்போதும் வழுக்கி, தவறி விழுகின்றனர். படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வலியுறுத்தி, ஒரு சில இடங்களில் மட்டுமே அறிவிப்பு பலகை உள்ளது. அவ்வப்போது இவற்றை அகற்றவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !