உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் முன்னிலையில், 91 அடி உயர மூங்கில் மர கொடிக்கம்பம் நடப்பட்டது.


பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா நடக்கிறது. வரும், 31ம் தேதி இரவு, 12:30 மணிக்கு மயான பூஜையும், பிப்ரவரி 1ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் சக்தி கும்பஸ்தானம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் குண்டம் கட்டுதல்; மாலை, 6:30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல் கொடி இறக்குதல்; காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜை, வரும், 5ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, 91 அடி உயர மூங்கில் மரத்துக்கு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக ஆனைமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து உப்பாற்றங்கரையில், கம்பத்திற்கு வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், நேற்று காலை, 7:59 மணிக்கு, கொடிக்கம்பம் நடப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி., ஈஸ்வரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !