வால்பாறை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
வால்பாறை: மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மேலும் நகரில் புகழ்பெற்ற கோவில்களும் அமைந்துள்ளன. வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலின், 42ம் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. காலை, 10:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு அமாவாசை பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும், 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும் 24ம் தேதி வரை நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெள்ளைச்சாமி, செயலாளர் அர்ச்சுனன், பொருளாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.