விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி!
ADDED :4304 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில், சமயபுரம் மாரியம்மனுக்கு 15ம் ஆண்டு மாலை அணியும் நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து மண் சோறு உண்ணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி ஜெகமுத்து மாரியம்மன் கோவிலிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மஞ்சளாடை அணிந்த பக்தர்கள், விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, காலை 10.00 மணியளவில் மண் சோறு உண்டனர். நாளை 28ம் தேதி மாலை 6.00 மணியளவில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ரயில் யாத்திரை செல்கின்றனர்.