அந்தோணியார் கோயில் விழா: குழந்தைகளை ஏலம் விடும் நிகழ்ச்சி!
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே ஏ. வெள்ளோடு கிராமத்தில், திருவிழாவில் குழந்தைகளை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.ஏ. வெள்ளோடு தெற்கு தெருவில் பெரிய அந்தோணியார் கோயில் உள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும், குழந்தை வரம் வேண்டுவோரும், தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொள்வர். திருவிழாவின் போது, தங்கள் குழந்தைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவர். ஏலம் நடக்கும்போது, ரூபாய் 500 க்கு அதிகமாக யாரும் ஏலம் கேட்கக்கூடாது என்பது பொதுவான ஊர்கட்டுப்பாடாக உள்ளது. இதன்படி, ஏலத்தில் பங்கேற்பவர்கள், சிறிது,சிறிதாக தொகையை உயர்த்தி ஏலம் கேட்பர் இறுதியாக அதிகபட்ச தொகையை குழந்தையின் பெற்றோர் கேட்பர். இதனால், ஏலத்தொகையை கோயிலில் செலுத்தியதும், குழந்தை அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் இந்த ஆண்டு திருவிழாவின் நிறைவு நாளன்று குழந்தைகள் ஏலம் விடும். ஏலம் விடும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.