காரமடை ரங்கநாதர் கோவில் தேருக்கு இரும்பு சக்கரம்!
ADDED :4372 days ago
காரமடை: காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது. இங்கு நடைபெறும் மாசி தேர்த்திருவிழா சிறப்பானதாகும். நடைபெறவுள்ள மாசி மக தேர்த் திருவிழாவிற்காக தேர் புதுபிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வருடம் முதல் தேரில் மர சக்கரத்திற்கு பதிலாக இரும்பு சக்கரம் நான்கு பொறுத்தப்பட்டுள்ளது.