பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு பால் அபிஷேகம்!
ADDED :4306 days ago
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மூலநட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு நேற்று பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.