உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்!

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்!

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக்கிராமம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடந்தது. தேங்காய் உடைத்து வழிபட்ட பின் தேரோட்டம் துவங்கியது. தேரின் முன் இஸ்லாமியர்கள் தேங்காய் உடை த்து வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தபின், தேர் நிலையை வந்தடைந்தது.நிகழ்ச்சியில் மேல்மலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முருகன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கத்துடன், விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !