குறிஞ்சி நகர் கோவிலில் 108 கலச அபிஷேகம்!
ADDED :4307 days ago
புதுச்சேரி: குறிஞ்சி நகர், வலம்புரி ஞான விநாயகர் கோவிலில், 108 கலச அபிஷேகம் நடந்தது. கோவிலின் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவையொட்டி, நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாக பூஜையும் நடந்தது.நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், காலை 7:30 மணிக்கு அஷ்டலட்சுமி கோ பூஜையும், காலை 8:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனையும், 108 கலச அபிஷேகமும் நடந்தது.