சந்து மாரியம்மன் கோயில் விழா
ADDED :4307 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பாரம்பரியமான சந்து மாரியம்மன் கோயில் விழா துவங்கியது.ஆண்டுதோறும் தை மாதத்தில் தெரு முச்சந்திகளில் மாரியம்மனுக்கு விழா எடுத்து வழிபட்டு வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பு, நகர்ப்புறம் விஸ்தரிப்பு காரணமாக, தற்போது நூற்றுக்கணக்கான தெருக்களில் இந்த, சந்து மாரியம்மன் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா தற்போது துவங்கியுள்ளது. தொடர்ந்து செவ்வாய் கிழமைகளில் வெவ்வேறு தெருக்களில் விழா நடக்கிறது.