முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா!
ADDED :4305 days ago
கடையத்தில் பத்திரகாளி அம்மன், முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது. கடந்த 21ம்தேதி கால்நாட்டுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை பாபநாசத்தில் இருந்து 108 தீர்த்தம் பாதையாத்திரையாக முப்பிடாதி அம்மன் கோவிலை வந்து அடைந்தது. மேலும் பால்குடம் ஊர்வளமும் மதியம் சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது.