உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் மாசித்திருவிழா: பிப்., 6ல் கொடியேற்றம்!

திருச்செந்தூரில் மாசித்திருவிழா: பிப்., 6ல் கொடியேற்றம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்., 6 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா பிப்., 16 ல் தெப்பத்திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவையொட்டி, முருகன் கோயிலில், பிப்., 6 ல் நடை அதிகாலை 1:00 மணிக்கு திறக்கப்படும். 1:30 க்கு விஸ்வரூப தரிசனம், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 முதல் 6:30 க்குள் கொடியேற்றமும் நடைபெறும். இரவு பெலி நாயக்கர், அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் எழுந்தருளி 9 சன்னிதிகளில் திருவீதி உலா நடக்கவுள்ளது.பிப்., 10 ல் மேலக்கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடவருவாயில் தீபாரதணையும், சுவாமியும், அம்பாளும், தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிப்., 11 ல் காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா வருகிறார். பிப்., 12 ல் காலை 4:30 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவையும், காலை 9:00 மணிக்கு வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, அல்கோர, தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சுவாமி சிவப்பு சாத்தி, தங்க சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது. பிப். பிப்., 13 ல் வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி வீதியுலா வருகிறார். பின் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில், சுவாமி பச்சை சாத்தி வீதியுலா வருகிறார். பிப்., 14 ல் தங்க கைலாய பர்வத வாகனத்தில் சுவாமியும்,வெள்ளி கமல வாகனத்தில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பிப்., 15 ல் காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பிப்., 16 ல் தெப்பத்திருவிழாவுடன், மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் பொறுப்பு குணசேகரன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு மையம், குடி நீர், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, இடையூறு இல்லாதபோக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !