உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடகை பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடையடைப்பு!

வாடகை பிரச்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடையடைப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடை உரிமையாளர்கள், வாடகை கட்டணம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து, கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ,ஆண்டாள் கோயில் நிர்வாகத்திற்குட்பட 80க்கு மேற்பட்ட கடைகள், வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளுக்கு, நகராட்சி, மாநகராட்சி கடைகளுக்கு நடை முறையில் இருக்கும் சட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை கடைகளுக்கும், அமல்படுத்த வேண்டும். அறநிலையத்துறைக்கென தனிசட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆண்டாள் கோயில் சன்னதி தெரு கடைகள் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !