புனிதவனத்து சின்னப்பர்குருசடி ஆலயம் திருவிழா!
ADDED :4306 days ago
சாத்தூர்: சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள புனிதவனத்து சின்னப்பர் குருசடி ஆலயத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சாதி, மத பேதமின்றி பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலிபூஜை நடந்தது. பங்குத்தந்தை எஸ்.சேவியர்ராஜ் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் பங்குத்தந்தை ஆண்டனி திருப்பலிபூஜையை நிறைவேற்றினார். சாத்தூர் பங்கு பேரவையின் சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.