உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாய் மூகாம்பிகைக்கு பால் அபிஷேகம்!

தாய் மூகாம்பிகைக்கு பால் அபிஷேகம்!

ஆர்.கே.பேட்டை: தாய் மூகாம்பிகை அம்மனுக்கு, நேற்று, 1,008 குடம் பால் அபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பத்மாபுரம் சாமி நகரில் உள்ளது, தாய் மூகாம்பிகை கோவில், மூன்றாம் ஆண்டு, தீப ஸ்தம்ப விழா, நேற்று, நடந்தது.காலை 9:00 மணிக்கு, 1,008 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. 11:00 மணியளவில் மூலவர் தாய் மூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.மாலை 6:00 மணியளவில், கோவில் கொடிமரம் முன்பாக உள்ள மகா தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.பின், 7:00 மணிக்கு, உற்சவர், மேள தாளங்கள் முழங்க வீதியுலா வந்தார். இவ்விழாவில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !