உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமசமுத்திரத்தில் 6ம் தேதி கும்பாபிஷேகம்

சோமசமுத்திரத்தில் 6ம் தேதி கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி தாலுகா கோணை மதுரா சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகன், அம்மச்சார் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 5ம் தேதி மாலை 6 மணிக்கு எஜமான சங்கல்பம், அனிக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், இரவு 7.30 மணிக்கு அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடம் யாகசாலை பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஜபம், 108 விதமான ஹோம திரவிய விசேஷ ஹோமமும், 10.30 மணிக்கு முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனை நடக்கிறது. இரவு 11 மணிக்கு யந்திர ஸ்தாபனம், சாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. 6ம் தேதி காலை 5 மணிக்கு கோபூஜை, விநாகர் பூஜை, இரண்டாம் கால யாகசாலை துவக்கமும், 8.15 மணிக்கு நாடிசந்தானமும், விசேஷ ஹோம திரவிய ஹோமம், 8.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 8.50 மணிக்கு விநாயகர், முருகன், அம்மச்சார் அம்மன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !