சூலக்கல் கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4302 days ago
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு, உற்சவ மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில், நேற்று தை அம்மாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில், பெயிண்டிங் வேலை துவங்கியுள்ளதால், மூலவர் மாரியம்மனுக்கு எவ்வித பூஜையும் செய்யப்படவில்லை.
ஆனால், உற்சவ மாரியம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்து, தீபராதணை காண்பிக்கப்பட்டது. இப்பூஜையில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து மாரியம்மனை வழிப்பட்டனர்.