உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்ச்சை!

பண்ணாரியில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்ச்சை!

சத்தியமங்கலம்: தை அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரியில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து, நேர்ச்சைக்கடன் செலுத்தினர். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, காலை, 6 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மதியம் உச்சி பூஜை நேரத்தில், கோவிலை சுற்றிலும் பக்தர்கள், நீண்ட வரிசை யில் காத்திருந்து, தங்க கவசத்தில் இருந்த அம்மனை தரிசித்தனர். பல பக்தர்கள், கையில் தீச்சட்டி ஏந்தி, நேர்ச்சை கடன் செலுத்தினர். கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு, பூஜை முடிந்தபின், பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தனர். இதேபோல், திம்பம் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து, கிழக்கு பகுதியில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள, காட்டு பண்ணாரி என அழைக்கப்படும், பேளேரி அம்மன் கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அடர்ந்த வனப்பகுதியில், மூன்று கி.மீ., நடந்து சென்று, பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !