உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோரக்காட்டூர் கோவில் குண்டம் இறங்கி நேர்ச்சை!

கோரக்காட்டூர் கோவில் குண்டம் இறங்கி நேர்ச்சை!

கோபிசெட்டிபாளையம்: கோரக்காட்டூர், கரியகாளியம்மன் கோவில் குண்டத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, நேர்த்தி கடனை செலுத்தினர். கோபி அருகே கோரக்காட்டூரில், மிகவும பழமை வாய்ந்த கரியகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, குண்டம் திருவிழா ஜன., 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், கிராமசாந்தி, சுமங்கலி யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல், மாவிளக்கு, குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தன. நேற்று அதிகாலை நடந்த குண்டம் பூ மிதித்தல் நிகழ்ச்சியில், கடுக்கம்பாளையம், வெள்ளாங்கோவில், பொலவகாளிபாளையம், கோரக்காட்டூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். சில பக்தர்கள், தீ சட்டியுடன் குண்டத்தில் இறங்கி, ஸ்வாமிக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று அம்மன் ரதம் ஏறுதல், ரத உற்சவம், நடன நிகழ்ச்சி, நாளை வாணவேடிக்கை, புஷ்ப பல்லக்கு, 2ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், மறு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !