கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத்விழா!
ADDED :4273 days ago
கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று பத்ர தீப விழா நடைபெற்றது. உற்சவ மூர்த்தி சன்னிதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த பத்தாயிரத்து எட்டு தீபங்களை பெண்கள் மற்றும் பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.