சவுடேஸ்வரியம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா
ADDED :4273 days ago
நாமக்கல்: சவுடேஸ்வரியம்மன் அம்மன் கோயிலில் தை அமாவாசை விழாவையொட்டி, வீரகுமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழா சண்டிஹோம யாக பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு, வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் கோயில் வளாகத்தில் வலம் வந்து, சக்தி அழைப்பு வைபவம் நடைபெற்றது. வீரக்குமாரர்கள் கத்தியுடன் அம்மன் முன்பாக நடனமாடி நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் திருவீதி உலாவில் சிறுமியரின் கோலாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.