உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் கோவி்ல் முன்பதிவு: மாரச் 1-ம் தேதி துவக்கம்!

அமர்நாத் கோவி்ல் முன்பதிவு: மாரச் 1-ம் தேதி துவக்கம்!

புதுடில்லி: இந்தாண்டிற்கான அமர்நாத்கோவில் புனித பயண முன்பதிவு மார்ச் ஒன்றாம தேதி துவங்க உள்ளது. இத்தகவலை கோவில் நிர்வாக குழு அதிகாரி நவீன் கே சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக கோவில் நிர்வாக குழு தலைவர் என்.என். வோர தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மார்ச் ஒன்றாம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மற்றும் எஸ் பேங்க் கிளைகள் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் ஜூன் மாதம் 28-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கான யாத்திரை துவங்குகிறது. யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம 10-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. யாத்திரைக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியம் குறித்த விண்ப்பத்தை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை கோவிலின் இணையதளம் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டுக்கான யாத்திரை முன்பதிவு மார்ச் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !