உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி முடி காணிக்கை வருமானம் ரூ.78 கோடியை எட்டியது!

திருப்பதி முடி காணிக்கை வருமானம் ரூ.78 கோடியை எட்டியது!

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, விற்றதன் மூலம், 78 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் தலையை மொட்டை அடிப்பதன் மூலம் கிடைக்கும் முடியை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை விற்பது, தேவஸ்தானத்தின் வழக்கம். ரகம் வாரியாக தரம் பிரித்து, ரகத்திற்கேற்ப விலையை நிர்ணயம் செய்து, இணையதள ஏலம் மூலம், தேவஸ்தானம் விற்று வருகிறது. இவ்வாறு, நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், ஒரு லட்சம் கிலோ தலைமுடி விற்கப்பட்டதில், 78 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தலைமுடி, பலவிதங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. அழகுக் கலைப் பிரிவில், சவுரி, புருவம், இமை ஆகியவற்றைத் தயாரிக்கவும், சில உணவு வகைகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !