உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் கண்காணிப்பு கேமரா!

ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் கண்காணிப்பு கேமரா!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் கண்காணிப்பு சுழற் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த சில மாதங்கள் முன்பு, கோயில் நான்கு ரதவீதிகளில் வாகனம், கோயிலுக்குள் மொபைல், கேமரா கொண்டு செல்ல போலீசார், தடை விதித்தனர். இதனைதொடர்ந்து சுவாமி, அம்மன் சன்னதி, முதல் பிரகாரத்தில் கண்காணிப்பு கேமரா, கிழக்கு, மேற்கு நுழைவு வாசலில் வெடிகுண்டு கண்டறியும் "மெட்டல் டிடெக்டர் பிரேம் பொருத்தி, பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, கோயில் 3ம் பிரகாரம், சேதுபதி மண்டபத்தில் ரூ. 20 லட்சத்தில் 4 சுழற் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மூன்றாம் பிரகாரம், மேற்கு, கிழக்கு வாசலில் நுழையும் பக்தர்களை கண்காணிக்க முடியும் என, கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !